12th November 2024 17:43:07 Hours
பிரிகேடியர் பீ.டி.என்.ஐ. அல்மேதா ஆர்எஸ்பீ அவர்கள் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 2024 நவம்பர் 11 அன்று அனுராதபுரம் 'அபிமன்சல 1' நல விடுதியின் புதிய தளபதியாக பதவியேற்றார்.
வருகை தந்த தளபதிக்கு படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சிரேஷ்ட அதிகாரிகள் மரியாதையுடன் வரவேற்றனர். அவரது அலுவலகத்தில், மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில், முறைப்படி ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். பின்னர், புதிய தளபதி வளாகத்தில் மரக்கன்று நாட்டியதுடன், நலவிடுதியில் புனர்வாழ்வளிக்கப்படும் போர் வீரர்களின் நலன்களை கேட்டறிந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.