05th November 2024 18:26:41 Hours
வெடிபொருட்களை அகற்றும் அடிப்படை பாடநெறியைத் தொடர்ந்து இலங்கை விமானப்படையின் மாணவர் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் 31 ஒக்டோபர் 2024 அன்று இலங்கை இராணுவ பொறியியல் பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டனர்.
இந்த விஜயம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களை மேம்படுத்தப்பட்ட வெடி பொருட்களை அகற்றும் நுட்பங்களைக் பார்வையிடவும் பயிற்சி மாதிரி அறையை ஆராய்வதற்கும் மேற்கொள்ளப்பட்டது. இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் தளபதி கேணல் ஜே.ஏ.சி.எஸ். ஜாகோட பீஎஸ்சீ அவர்கள் வருகை தந்த குழுவை வரவேற்றார். இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் பிரதம பயிற்றுவிப்பாளர் மேஜர் எல்.எல்.சீ.எஸ் கப்ரால் பீஎஸ்சீ அவர்கள் பாடசாலையின் தொலைநோக்குப் பார்வை மற்றும் தேசப் பாதுகாப்பில் இலங்கை பொறியியல் படையின் பங்கை எடுத்துரைத்தார்.
களப் பொறியியலின் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நேரடி வெடி பொருட்கள் அகற்றும் செயற்திட்டங்களைக் காட்சிப்படுத்தியது. விஜயத்தின் நிறைவில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.