05th November 2024 18:34:04 Hours
பொறியியல் சேவைகள் மத்திய பணிமனை தனது 27வது ஆண்டு நிறைவு நிகழ்வை 30 ஒக்டோபர் 2024 அன்று ஹபரகட பொறியியல் சேவைகள் மத்திய பணிமனையின் தளபதி கேணல் என் வணிகசிங்க எல்எஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டாடியது.
நினைவாண்டு நிகழ்வை முன்னிட்டு 16 ஒக்டோபர் 2024 அன்று தர்ம பிரசங்கத்தில் கலந்து கொண்ட படையினர், 17 ஒக்டோபர் 2024 அன்று மீகொடை மாகாண ஆயுர்வேத மருத்துவமனையில் சிரமதான பணிகயையும் முன்னெடுத்தனர். பின்னர் படையினர் நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டியையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆண்டு நிறைவு விழா நாளில், தளபதிக்கு சம்பிரதாய முறைக்கு அமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து குழு படம் எடுத்தல் மற்றும் அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்துபசாரம் இடம்பெற்றது. பின்னர் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் சார்ஜன் உணவகத்தின் தங்குமிட கட்டிடம் மற்றும் பனாகொடை இராணுவ முகாம் வளாகத்தின் பி வாயில் அருகே நிர்மாணிக்கப்பட்ட இரண்டு பேருந்து நிறுத்தங்களையும் தளபதி திறந்து வைத்தார். இசை நிகழ்ச்சியுடன் நிகழ்வுகள் நிறைவுற்றன.