05th November 2024 18:37:01 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 25 ஒக்டோபர் 2024 அன்று 611 வது காலாட் பிரிகேடிற்கு விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த அவரது வாகன தொடரணிக்கு மரியதை வழங்கப்பட்டதுடன், 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 611 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோர்களால் வரவேற்கப்பட்டார்.
இவ்விஜயத்தின் போது, 611 வது காலாட் பிரிகேட் தளபதி, பிரிகேடின் செயற்பாட்டு கடமைகள், தற்போதுள்ள செயற்திட்டங்கள் மற்றும் தற்போதைய நிலை தொடர்பான விரிவான விளக்கத்தை வழங்கினார். பின்னர் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பை அடையாளப்படுத்தும் வகையில் படைப்பிரிவு வளாகத்தில் மரக்கன்று நாட்டினார். அவர் படையினருக்கு உரையாற்றியதுடன் புதிய பிரிகேட் தலைமையகத்திற்கான உத்தேச இடத்தையும் பார்வையிட்டார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.