06th November 2024 22:00:57 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 12 வது காலாட் படைப்பிரிவு,121 வது காலாட் பிரிகேட், 122 வது காலாட் பிரிகேட், 20 வது இலங்கை சிங்க படையணி,18 வது கெமுனு ஹேவா படையணி,12 வது கஜபா படையணி மற்றும் 3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி ஆகியவற்றுக்கு 2024 ஒக்டோபர் 30,31 ஆம் திகதிகளில் விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த அவரை 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, மேஜர் ஜெனரல் பீகேடபிள்யூடபிள்யூஎம்ஜேஎஸ்பிடபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுடன் பிரிகேட் தளபதிகள் மற்றும் ஏனைய படையலகுகளின் கட்டளை அதிகாரிகளால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். பின்னர் அவருக்கு ஒவ்வொரு இடத்திலும் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்த விஜயத்தின் நினைவாக மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி குழுபடம் எடுத்துக் கொண்டதுடன், படைப்பிரிவு தலைமையகம் மற்றும் ஏனைய இடங்களில் சந்தன மரக்கன்றுகளை நாட்டினார். பின்னர், வருகை தந்த சிரேஷ்ட அதிகாரி, காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் பிரிகேட் தளபதிகளிடமிருந்து விரிவான விளக்கத்தைப் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து, அவர் படையினருக்கான உரையின் போது, சமூக ஊடகங்களின் பொறுப்பான பயன்பாடு, சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து விலகியிருப்பதன் முக்கியத்துவம் மற்றும் தனிப்பட்ட நிதி நிர்வாகத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்த விஜயத்தின்போது கதிர்காம ஜனாதிபதி மாளிகை மற்றும் யால லயா ஹோட்டலுக்கும் அவர் விஜயம் செய்தார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.