Header

Sri Lanka Army

Defender of the Nation

04th November 2024 19:37:48 Hours

7 வது இலங்கை பீரங்கி படையணி படையினரால் மின்னேரியாவில் ஒரு சிப்பாய்க்கு புதிய வீடு

7 வது இலங்கை பீரங்கி படையணி படையினர், 23 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் 231 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் 7 வது இலங்கை பீரங்கி படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரிக்கு மஹரத்மலே-மின்னேரியாவில் ஒரு புதிய வீட்டை நிர்மாணித்தனர்.

7 வது இலங்கை பீரங்கி படையணி அதிகாரிகள் மற்றும் படையினர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் தேவையான நிதி மற்றும் பொருள் உதவிகளைப் பெற்று கட்டுமானப் பணியை நிறைவு செய்தனர்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு 30 ஒக்டோபர் 2024 அன்று, 7 வது இலங்கை பீரங்கி படையணி கட்டளை அதிகாரியின் அழைப்பின் பேரில் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களால் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் இராணுவ வீரர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.