Header

Sri Lanka Army

Defender of the Nation

04th November 2024 13:33:30 Hours

8 வது இலங்கை சிங்க படையணியின் 32வது ஆண்டு நிறைவு

8 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்கேஎல்பீகே சில்வா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2024 ஒக்டோபர் 16 அன்று படையலகு வளாகத்தில் தொடர்ச்சியான நிகழ்வுகளுடன் தனது 32 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.

படையலகு கொடி ஆசிர்வாதத்துடன் அன்றைய சம்பிரதாய நிகழ்வு ஆரம்பமாகிது.கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 8 வது இலங்கை சிங்க படையணியின் ஏற்பாட்டில் நிறுவனங்களுக்கு இடையேயான கிரிக்கெட் மற்றும் கரப்பந்து போட்டிகள் இடம்பெற்றன.

மேலும்,8 வது இலங்கை சிங்க படையணியின் படையினர் கேகாலை போதனா வைத்தியசாலை நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் நலன் கருதி வைத்தியசாலை சூழலில் சிரமதான பணியை மேற்கொண்டனர். அனைத்து நிலையினருக்கான மதிய உணவு மற்றும் ஒன்றுகூடலுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.