04th November 2024 19:48:26 Hours
இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியும் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சி.கே. வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 31 ஒக்டோபர் 2024 அன்று 3 வது இயந்திரவியல் காலாட் படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த படையணியின் படைத் தளபதியை கட்டளை அதிகாரி மரியாதை செலுத்தி வரவேற்றதுடன் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், படைத் தளபதி தனது விஜயத்தின் நினைவாக மரக்கன்று நட்டியதுடன், படையலகு படையினருக்கு உரையாற்றினார். மேலும் படையலகு தொடர்பான செயற்பாடுகள் மற்றும் நிர்வாக விடயங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.