03rd November 2024 18:03:09 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் அதன் 21 வது ஆண்டு நிறைவு விழாவை 31 ஒக்டோபர் 2024 அன்று கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் தலைமையில் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் கொண்டாடியது.
21 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக பிரதேசத்தில் பணியாற்றும் அனைவருக்கும் ஆசீர்வாதம் வழங்கும் வகையில் பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவம் உள்ளிட்ட மத வழிபாடுகள் நடாத்தப்பட்டன.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் 25 மதகுருமார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த மத நிகழ்வுகள் ஆன்மிக பிரதிபலிப்பு மற்றும் நன்றியுணர்வின் ஒரு தருணத்தை அளித்தன, போர் வீரர்களை நினைவுபடுத்தும் அதே வேளையில், அவர்களின் கோரும் பாத்திரங்களுக்கு மத்தியில் உள் வலிமை மற்றும் அமைதியின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தியது.
இராணுவ சம்பிரதாயத்திற்க்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மரியாதையுடன் வரவேற்கப்பட்டதை தொடந்து 7 வது இலங்கை பொறியியல் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து குழுப்படம் எடுத்தல், மரக்கன்று நடுதல் ஆகியவற்றுடன் 21 வது ஆண்டு நிறைவு நிறைவுற்றது.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி படையினருக்கான உரையின் போது படையினரின் அர்ப்பணிப்பு, தொழில்முறை மற்றும் கிழக்கு பாதுகாப்புப் படையின் வெற்றிக்கான தங்களின் பங்களிப்பை பாராட்டியதுடன், ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் சேவையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டினார்.
பின்னர், கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அதிகாரிகள், அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நட்புறவு உணர்வை வளர்ப்பதுடன், நெருக்கமான பிணைப்புகளை அடையாளப்படுத்துகிறது.