04th November 2024 13:32:09 Hours
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யூ. கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் 31 ஒக்டோபர் 2024 அன்று கட்டுகஸ்தோட்டை ஸ்ரீ சந்தானந்த பௌத்த ஆண்கள்/பெண்கள் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.
அதி வண. உருளை வத்தே தம்மசித்தி ஸ்ரீ அத்ததஸ்ஸி தம்மரக்கிதாபிதான நாயக்க தேரர் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தார். கல்லூரியின் ஸ்தாபகர் அதி வண. கொடகம தர்மகீர்த்தி ஸ்ரீ சந்தானந்த மங்களபிதான நஹிமி, கல்லூரி அதிபர் வண. முதுநிலை கொடகம தம்மகித்தி தேரர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.