04th November 2024 19:48:09 Hours
189 சிப்பாய்களின் பங்கேற்புடன் அம்பாறை போர்ப் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்ற ‘கற்பித்தல் முறைமை பாடநெறி எண்-76’ 20 ஒக்டோபர் 2024 அன்று நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வுடன் நிறைவடைந்தது.
பாடநெறியில் கலந்துகொண்டவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கியதன் பின்னர், போர்ப் பயிற்சிப் பாடசாலையில் கட்டளை அதிகாரி கேணல் பீ.ஐ புஞ்சிஹேவா அவர்களினால் நிறைவுரை வழங்கப்பட்டது.
இலங்கை பொறியியல் படையணியின் லான்ஸ் கோப்ரல் டி.பி.எஸ் தில்ஹார அவர்களுக்கு சிறந்த மாணவருக்கான வெற்றிக்கிண்ணமும் சான்றிதழும் விழாவின் போது வழங்கப்பட்டது.