04th November 2024 08:43:02 Hours
யாழ்.பாதுகாப்பு படை தலைமையக வழங்கல் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜி.எல்.எஸ்.டபிள்யூ லியனகே யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2024 நவம்பர் 02 ஆம் திகதி பலாலி இராணுவத் தள மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை வைத்தியசாலையின் கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூ.ஏ.என்.சி விஜேசிங்க மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் மரியாதையுடன் வரவேற்றனர். கட்டளை அதிகாரியிடம் இருந்து மருத்துவ சேவைகள் தொடர்பான விளக்கத்தைப் பெற்ற வழங்கல் கட்டளை தளபதி, மருத்துவமனையின் அனைத்து இடங்களையும், தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டுமான தளங்களையும் ஆய்வு செய்தார்.
இறுதியாக, வழங்கல் கட்டளை தளபதி மருத்துவமனை ஊழியர்களுக்கு இராணுவ சுகாதாரத்தில் சிறந்து விளங்க தொடர்ந்து பணிகளை முன்னெடுக்க அவர்களை ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றியதுடன் தனது வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.