Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd November 2024 17:58:55 Hours

24 வது காலாட் படைப்பிரிவினால் அம்/கல்கந்த ஆரம்பப் பாடசாலைக்கான நன்கொடை திட்டம் ஏற்பாடு

24 வது காலாட் படைப்பிரிவு, மேஜர் ஜெனரல் டபிள்யூ.எல்.ஏ.சி பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் தலைமையில், வளம் குறைந்த அம்/கல்கந்த ஆரம்பப் பாடசாலைக்கு ஆதரவளிக்கும் நோக்கில் நன்கொடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த திட்டம் 2024 ஒக்டோபர் 28 ஆம் திகதி நடைபெற்றதுடன், அதி வண. பண்டிதர் திகமடுல்லே விமலானந்த தேரர் மற்றும் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் உள்ள பெர்விக், சாக்யா இளைஞர் குழுவின் தாராளமான நிதி உதவியினால் சாத்தியமானது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் கல்வி வளங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் வகையில் பாடசாலை இசைக்குழுவினருக்கான இசைக்கருவிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேணல் பொதுப் பணிநிலை மற்றும் பேராசிரியர் கௌமதி கருணாகொட ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்து நன்கொடை நிகழ்ச்சியை நடாத்தினர்.

24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி தனது வரவேற்புரையில், கல்வியின் முக்கியத்துவத்தையும், குறைந்த வசதியுள்ள பாடசாலையிலுள்ள பிள்ளைகளின் வாழ்க்கையில் இத்தகைய பங்களிப்புகள் எவ்வாறு ஆழமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதையும் வலியுறுத்தினார். மேலும் சாக்யா இளைஞர் குழுவுடனான கூட்டுறவை அவர் பாராட்டியதுடன், பிரதேசத்தில் கல்வியை மேம்படுத்துவதற்கான அவர்களின் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்தார். இந்த நன்கொடையை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகத்துடன் ஏற்றுக் கொண்டனர். இந்த வளங்கள் அவர்களது இணைப்பாடவிதான செயற்படுகளில் பயன்படும்.