Header

Sri Lanka Army

Defender of the Nation

04th November 2024 08:45:48 Hours

வடக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநருக்கு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு அழைப்பு

வடக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் 02 நவம்பர் 2024 அன்று இராணுவத்தின் தற்போதைய சமூக செயற்திட்டங்கள் மற்றும் பிரதேசத்தின் பாதுகாப்பு நிலைமைகள் பற்றிய தகவல்களைப் பெறும் நோக்கத்துடன் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு மரியாதை நிமித்தமான விஜயம் மேற்கொண்டார்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் ஆளுநரை வரவேற்றதுடன், இராணுவம் ஆற்றிவரும் தொடர்ச்சியான சமூகப் பணிகளை பற்றி விளக்கமளித்தார். பின்னர், மாண்புமிகு ஆளுநர் அவர்கள் விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் தனது பாராட்டுக் குறிப்புகளை எழுதினார்.

மாண்புமிகு ஆளுநர் அவர்கள் பலாலி சிமிக் பூங்கா மற்றும் பல்-விளையாட்டு மைதானத்திற்கும் விஜயம் மேற்கொண்டார். வளாகத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் அதிகாரப்பூர்வ வருகையின் அடையாளமாக புளியங்கன்று ஒன்றையும் நட்டினார்.

51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபிஜேகே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ மற்றும் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பணிநிலை அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.