01st November 2024 11:14:13 Hours
இயந்திரவியல் காலாட் படையணி 29 ஒக்டோபர் 2024 அன்று ஒரு புதிய டென்னிஸ் மைதானம் மற்றும் கட்டழகுப் பயிற்சி பூங்காவை திறந்து வைத்தது. இத்திட்டம் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் உடற்தகுதி மற்றும் விளையாட்டுத்திறனை மேம்படுத்துவதற்கான நீண்ட கால தேவையை நிறைவேற்றியது.
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சி.கே. வனசிங்க ஆர்எஸபீ யூஎஸ்பீ அவர்கள் உத்தியோகபூர்வமாக இந்த வசதிகளை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பதாகை திரைநீக்கம் செய்யப்பட்டதுடன், இராணுவ டென்னிஸ் மைதானத்தில் கண்காட்சி டென்னிஸ் போட்டியும், பங்குபற்றியவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.