02nd November 2024 11:14:13 Hours
2024 நவம்பர் 01 அன்று அமெரிக்க அரச அனுசரணையுடன் கூடிய பயிற்சி மற்றும் உதவிகளை வழங்குவதற்காக ஐக்கிய மாகாணங்களின் தூதுக்குழுவினர் இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி பிரிகேடியர் எஸ்.ஏ. ஹெட்டிகே ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கினார்.
ஐக்கிய நாடுகள் சபைக்கு பங்களிக்கும் படையினர் என்ற வகையில் நிறுவனத்தின் பங்கு மற்றும் இலங்கையின் பங்களிப்புகளை எடுத்துக்காட்டும் விளக்கக்காட்சியுடன் நாள் ஆரம்பமாகியது. அத்துடன் அமெரிக்க அரச அனுசரணையுடன் கூடிய பயிற்சியின் முன்னேற்றம் மற்றும் இலங்கை இராணுவத்தின் படையணிகள், இராணுவ கண்காணிப்பாளர்கள் மற்றும் பணிநில அதிகாரிகள் அனுப்புவதன் மூலம் ஐ.நா அமைதி காக்கும் முயற்சிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை மையமாகக் கொண்ட ஒரு ஆக்கபூர்வமான கலந்துரையாடல் நடைபெற்றது.
தூதுக்குழுவினர், ஒரு போர் தாங்கி, தற்போதுள்ள பயிற்சி வசதிகளை பார்வையிட்டதுடன், அமைதி காக்கும் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவது குறித்த கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.