02nd November 2024 11:15:26 Hours
61 வது காலாட் படைபிரிவின் தளபதி பிரிகேடியர் கே.டி.பீ. டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 2024 ஒக்டோபர் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் 573 வது காலாட் பிரிகேட் மற்றும் அதன் கட்டளை படையலகுகளுக்கும் விஜயம் மேற்கொண்டார்.
அவரது விஜயம் கெட்டபொல பிரிகேட் தலைமையக நிர்மாணத் தளத்தை ஆய்வு செய்வதோடு ஆரம்பமாகியது. அங்கு அவர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன், பிரிகேட் தளபதியினால் அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. பின்னர், அவர் 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு விஜயம் மேற்கொண்டார். அங்கு அவர் தேடுதல் மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கான படையினரின் தயார்நிலையை ஆய்வு செய்தார்.
இரண்டாவது நாளில், காலாட் படைபிரிவின் தளபதி 2 வது (தொ) கெமுனு ஹேவா படையணிக்கு விஜயம் செய்ததுடன், வலஹந்துவவில் அமைந்துள்ள அதன் பிரிவில் உள்ள வசதிகளையும் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.