31st October 2024 18:10:21 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் வழிகாட்டலின் கீழ், இராணுவ சேவை வனிதையர் பிரிவு 2024 ஒக்டோபர் 30 ஆம் திகதி முல்லேரியா தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் 6 ஆம் வார்ட்டின் நோயாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அன்பளிப்பு செய்தது.
நிகழ்ச்சியின் போது, நோயாளர்களுக்கு மதிய உணவும், கலிப்சோ இசை பொழுதுபோக்கு நிகழ்ச்சியும் நடாத்தப்பட்டது.
மேலும், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பணியாளர்கள் வார்டின் வடிகால் அமைப்பை சுத்தம் செய்ததுடன், சேதமடைந்தவைகளை சரிசெய்தனர்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் முல்லேரியா தேசிய மனநல சுகாதார நிறுவகத்தின் பணியாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.