31st October 2024 18:28:34 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் கஜபா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 26 ஒக்டோபர் 2024 அன்று 2 வது (தொ) கஜபா படையணி மற்றும் 5 வது (தொ) கஜபா படையணிகளுக்கு விஜயம் மேற்கொண்டார்.
படையணியின் படைத் தளபதி ஒவ்வொரு இடத்திலும் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், அங்கு உள்ள வீரமரணமடைந்த போர் வீரர்களின் நினைவு தூபியில் மலர் அஞ்சலி செலுத்தினார். மரக்கன்று நடுதல், கட்டளை அதிகாரிகளின் விளக்கங்கள், படையினருக்கான உரை மற்றும் ஒவ்வொரு படையலகுகளையும் பார்வையிடுதல் என்பன இந்த நிகழ்ச்சியில் அடங்கியிருந்தன.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.