29th October 2024 14:23:50 Hours
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 25 ஒக்டோபர் 2024 அன்று அதிகாரவாணையற்ற அதிகாரி ஒருவருக்காக புஸ்ஸல்தெனிய, அட்டுகொட, தமுனுபொலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
இராணுவத் தளபதியின் கருத்திற்கமைய இந்தத்திட்டம், அதன் பணியாளர்களுக்கு ஆதரவளிப்பதில் இராணுவத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 8 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்கேஎல்பீகே சில்வா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பூ அவர்களின் மேற்பார்வையில், 8 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் லான்ஸ் கோப்ரல் எச்பீஎச் தேசப்பிரிய அவர்களின் வீட்டு கட்டுமானப் பணி நிறைவு செய்யப்பட்டது.
நிகழ்வின் போது, மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் பிரதம அதிதி உத்தியோகபூர்வமாக பயனாளிக்கு வீட்டின் சாவியை கையளித்தார். உள்ளூர் நன்கொடையாளர்களின் நிதியுதவியில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறுகிய காலத்துக்குள் வீட்டை நிர்மாணித்து முடிக்க திட்டக்குழுவினரின் கடுமையான முயற்சிகளுக்கு மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்நிகழ்வில், 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி, 611 வது காலாட் பிரிகேட் தளபதி, மேற்கு பாதுகாப்பு படை தலைமையக பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி, 8 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி, 8 வது இலங்கை சிங்க படையணியின் படையினர் என பலர் கலந்து கொண்டனர்.