28th October 2024 14:45:01 Hours
61 வது காலாட் படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் கே.டி.பீ. டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2024 ஒக்டோபர் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் 572 வது காலாட் பிரிகேட் மற்றும் அதன் படையலகுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
அவர் பம்பரகஸ்தென்ன 572 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தின் உத்தேச நிர்மாணப் பணிகளை பார்வையிட்டார். அத்துடன் அவருக்கு பிரிகேட் வளாகத்தில் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது.
பின்னர், பிரிகேட் தளபதியினால் வழங்கப்பட்ட விளக்கமளிக்கும் சந்திப்பில் காலாட் படைப்பிரிவு தளபதி கலந்து கொண்டார். இதையடுத்து, முகாம் வளாகத்தை பார்வையிட்ட அவர், கூரகல பௌத்த மடாலயத்தையும் பார்வையிட்டார்.
பின்னர், காலாட் படைப்பிரிவு தளபதி, 572 வது காலாட் பிரிகேட் மற்றும் 8 கெமுனு ஹேவா படையணி படையினருக்கு குருவிட்ட கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் உரையாற்றினார். தேடுதல் மற்றும் அனர்த்த மீட்பு நடவடிக்கைகளுக்கான படையணியின் தயார்நிலையையும், அதன் உபகரணங்களையும் அவர் ஆய்வு செய்தார்.
2024 ஒக்டோபர் 21 ஆம் திகதி, உடவலவை இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் தள பணிமனை, துங்கம இலங்கை இராணுவப் பொறியியல் பயிற்சி பாடசாலை மற்றும் குட்டிகல இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி வர்த்தகப் பாடசாலை ஆகியவற்றிற்கு அவர் விஜயம் மேற்கொண்டார். மேலும், அவர் எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி மாளிகைக்கும் விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.