28th October 2024 15:45:14 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள், 572 வது காலாட் பிரிகேடிற்கு 24 ஒக்டோபர் 2024 அன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
பிரிகேட் தலைமையகத்தை இடமாற்றம் செய்வதற்கு புதிதாக முன்மொழியப்பட்ட காணியை அவர் ஆய்வு செய்தலோடு இந்த விஜயம் ஆரம்பமாகியது.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், 572 வது காலாட் பிரிகேட் தளபதி, பிரிகேடின் செயற்பாட்டுகள், அதன் பங்கு பற்றிய விரிவான விளக்கத்தை வழங்கினார்.
தளபதி, பின்னர் 8 வது கெமுனு ஹேவா படையணிக்கு விஜயம் மேற்கொண்டார். அங்கு அவர் பொலிஸ் மற்றும் பிற நிறுவனங்களுடன் இராணுவ ஒத்துழைப்பு உட்பட தற்போதைய பிரச்சினைகள் குறித்து படையினருக்கு உரையாற்றினார். இராணுவ ஒழுக்கம், திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் மற்றும் தேசிய பாதுகாப்பை ஆதரிப்பதற்கான தயார்நிலை ஆகியவற்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். படையணியின் இடர் நிவாரண உபகரணங்களையும் தளபதி பார்வையிட்டதுடன், அவசரநிலைக்கு தயார்நிலையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் கையெழுத்திட்டதுடன் இந்த விஜயம் முடிவடைந்தது.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.