29th October 2024 14:17:07 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணி, அதன் 143 வது ஆண்டு நிறைவை 23 ஒக்டோபர் 2024 அன்று தொடர் நிகழ்வுகளுடன் கொண்டாடியது.
வருகை தந்த மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யாஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி வரவேற்கப்பட்டார். இந்த ஆண்டு நிறைவு விழாவில், படையணி அணிவகுப்பு மைதானத்தில் மரியாதைக்குறிய அணிவகுப்பு மரியாதை, அனைத்து நிலையினருடனான குழுப்படங்கள், படையினருக்கான உரை மற்றும் அனைத்து நிலையினருக்கமான மதிய உணவு ஆகியவை அடங்கியிருந்தன.
பின்னர், படையணி தலைமையகத்தில் உள்ள “அபிமன்முதுநாதா” போர் வீரர்களின் நினைவுச்சின்னத்தில் வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் படையணி தலைமையகத்தில் இரவு முழுவதும் பிரித் பாராயணம் நிகழ்வும் மகா சங்கத்தினருக்கான தானமும் வழங்கப்பட்டது.
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் முன்னாள் இராணுவ தளபதிகள், முன்னாள் படையணியின், படைத் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் உயிரிழந்த போர்வீரர்களின் உறவினர்கள் ஆகியோர் இந்த ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டனர்.