Header

Sri Lanka Army

Defender of the Nation

28th October 2024 17:49:13 Hours

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் இராணுவ தலைமையகத்திற்கு விஜயம்

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொந்தா (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்பிள்யூபீ மற்றும் இரண்டு பார்கள் ஆர்எஸ்பீ மற்றும் பார் யூஎஸ்பீ எம்எம்எஸ்சீ (ஆரம்ப கற்கை – சீனா) எம்எஸ்சீ (பாதுகாப்பு கற்கை) எம்ஜிடி எம்எஸ்சீ (பாதுகாப்பு மற்றும் ஆரம்ப கற்கை) எப்என்டியூ (சீனா) பீஎஸ்சீ அவர்கள் 28 ஒக்டோபர் 2024 அன்று இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை, இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகமும், இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சீ.எஸ் முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். பின்னர் இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அணிவகுப்புத் தளபதி மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் இணைந்து இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை பரிசீலனை செய்தார். பின்னர் இராணுவத் தலைமையக மண்டபத்தில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் செயலாளரை மரியாதையுடன் வரவேற்று, இராணுவத்தின் முதன்மைப் பணிநிலை அதிகாரிகளை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து குழுப்படமும் எடுத்துக் கொண்டனர்.

இராணுவத் தளபதி அலுவலகத்தில் நடைபெற்ற சம்பிரதாய சந்திப்பின் போது, இராணுவ தளபதி மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் பரஸ்பர முக்கியத்துவம் மற்றும் முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடினர். தொடர்ந்து, கலந்துரையாடல் மண்டபத்தில் இராணுவ பதவி நிலை பிரதானி அவர்களினால் நடாத்தப்பட்ட விளக்க அமர்வில் செயலாளர் கலந்து கொண்டார், அங்கு அவருக்கு இராணுவத்தின் கட்டமைப்பு, பங்கு மற்றும் பணிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இராணுவத் தலைமையகத்தின் 07 ம் கட்டடத்தில் இராணுவத்தினருக்கான தனது முதல் உரையில், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் இராணுவத்தின் அர்ப்பணிப்பை செயலாளர் பாராட்டினார். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் இராணுவத்தின் முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார், தேசிய பாதுகாப்பு மற்றும் சவால்களை எதிர்கொள்வதில் அதன் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். விஜயத்தை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றப்பட்டதுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன. நிகழ்வின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் செயலாளரினால் விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் பாராட்டுக் குறிப்புகள் எழுதப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் முதன்மை பணிநிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.