24th October 2024 19:05:59 Hours
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 2024 ஒக்டோபர் 24 அன்று “இலங்கை இராணுவத்தின் தேசிய பாதுகாப்பு பங்கு” என்ற தொனிப்பொருளில் “தளபதியின் விரிவுரையை” வழங்குவதற்காக தேசிய பாதுகாப்புக் கல்லூரியால் அழைக்கப்பட்டார்.
இந்த விரிவுரையானது சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை இராணுவம் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்கள் மற்றும் கவலைகள் பற்றிய விரிவான விளக்கத்தை வழங்கியதுடன் அவற்றின் பன்முகத்தன்மையை வலியுறுத்தும் அதே வேளையில் நிலவும் அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்தது. இவ் விரிவுரையானது கலந்துரையாடல் முறையில் இடம்பெற்றதுடன் மாணவ அதிகாரிகள் வினவல்கள் மற்றும் வினா விடை மூலம் தளபதியுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி எண். 03-2024 இல் பதிவுசெய்யப்பட்ட மாணவ அதிகாரிகளுக்கான விரிவுரையை நடைப்பெற்றதுடன் இதில் இராணுவத்தைச் சேர்ந்த 16 அதிகாரிகள், கடற்படையைச் சேர்ந்த 8 பேர், விமானப்படையைச் சேர்ந்த 6 பேர், காவல்துறையைச் சேர்ந்த 3 பேர், சவுதி அரேபியா, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 8 வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
தேசிய பாதுகாப்புக் கல்லூரி தளபதி மேஜர் ஜெனரல் டி ஜீ எஸ் செனரத் யாப்பா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ தளபதியை அன்புடன் வரவேற்றதுடன் சிரேஷ்ட பணிப்பாளர் (இராணுவம்) பிரிகேடியர் எம்ஜேஆர்எஸ் மெதகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி ஐஜீ அவர்கள் அன்றைய விரிவுரைக்கான அறிமுக உரையை வழங்கினார்.
விரிவுரையின் முடிவில், இராணுவ தளபதி அனைத்து மாணவர் அதிகாரிகளுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், தேசிய பாதுகாப்புக் கல்லூரி விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் கருத்துக்களைப் பதிவு செய்தார். பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும் முகமாக, தளபதியினால் இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. புறப்படுவதற்கு முன், தளபதி அவர்கள் சிறப்புமிக்க பங்கேற்பாளர்களுடன் குழு படம் எடுத்துகொண்டார்.