24th October 2024 11:25:50 Hours
சர்வதேச டேக்வாண்டோ விளக்காட்சி (குக்கிவோன்) 23 ஒக்டோபர் 2024 அன்று இராணுவ உடற்பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் அதிமேதகு மியோன் லீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இலங்கை மற்றும் கொரியாவின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டதுடன், இராணுவ டேக்வாண்டோ குழுவின் தலைவரின் அன்பான வரவேற்பு உரையுடன் விழா ஆரம்பமானது. பின்னர், நிகழ்வில் கொரிய குக்கிவோன் அணியினரின் டேக்வாண்டோ செயல்விளக்கம் இடம்பெற்றது.
கொரியத் தூதுவர் மற்றும் குக்கிவோன் செயல்விளக்க குழுவினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு இராணுவத் தளபதி விருதுகளை வழங்கினார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இத் தருணத்தில், டேக்வாண்டோவுக்கான அவரது பங்களிப்புகள் மற்றும் விளையாட்டில் நாட்டின் வெற்றிக்காக இந்த கௌரவத்தைப் பெறும் முதல் இலங்கை இராணுவத் தளபதியாக அவரைக் குறித்து லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு மாண்புமிகு கெளரவ டான் ஒன்றை வழங்கினார்.
கொரிய தூதுவர் தனது இறுதி உரையில், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நட்புறவை மேம்படுத்துவதில் கலாசார பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இலங்கைக்கும் கொரியாவிற்கும் இடையிலான வலுவான உறவுகளை எடுத்துரைத்தார். இந்நிகழ்வினை இலங்கை இராணுவ நடனக் குழுவினர் மெருகூட்டினர்.
இந்நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி, யாழ்.பாதுகாப்பு படை தலைமையக தளபதி, நிறைவேற்றுப்பணிப்பாளர் நாயகம், பிரதான பதவி நிலை அதிகாரிகள் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.