23rd October 2024 15:40:07 Hours
61 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி பிரிகேடியர் கேடீபீ டி சில்வா அவர்கள் 613 வது காலாட் பிரிகேட், 9 வது இலங்கை சிங்க படையணி மற்றும் 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணி ஆகியவற்றிற்கு 16 ஒக்டோபர் 2024 அன்று தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
வருகை தந்த தளபதியின் வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து 613 வது காலாட் பிரிகேட் தளபதி அவரை வரவேற்றார்,
விஜயத்தின் போது, படைப்பிரிவு தளபதி பிரிகேட் பணியாளர்களுடன் குழு படம் எடுத்து கொண்டதுடன் மரக்கன்றினை நாட்டி படையினருக்கு உரையாற்றியானர். தனது உரையினை தொடர்ந்து விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் அவர் தனது கருத்துக்களை பதிவிட்டதுடன் , 9 வது இலங்கை சிங்க படையணி மற்றும் 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணிக்கு விஜயம் செய்தார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.