23rd October 2024 06:22:30 Hours
பாதுகாப்பு மற்றும் மூலோபாய பாடநெறி 2024 இன் கேணல் லாரா ட்ராய் சீஎஸ்சீ தலைமையிலான ஆஸ்திரேலிய தூதுக்குழு, கேணல் அமண்டா ஜான்ஸ்டன் (பாதுகாப்பு இணைப்பாளர்), கேணல் எம்மா மேரி தாமஸ் (நியூசிலாந்து) மற்றும் கேணல் ஆண்ட்ரூ கார்டன் டெம்பிள் கிர்பி ஆகியோர் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களை 2024 ஒக்டோபர் 21ம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தனர்.
கலந்துரையாடலின் போது, இராணுவ பதவி நிலை பிரதானி மதிப்புமிக்க கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுடன் மேலும் இரு தரப்பினரும் தங்கள் நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையே நட்பு, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஆகியவற்றின் வலுவான பிணைப்புகளை பற்றி கலந்துரையாடினர்.
சுமூகமான சந்திப்பின் நிறைவில், இலங்கை இராணுவத்தினருக்கும் வருகை தந்த தூதுக்குழுவினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன. இந்நிகழ்வில் இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களும் கலந்து கொண்டார்.