22nd October 2024 14:45:49 Hours
கேணல் கேதர் தத்தாத்ராய குப்தா, கேணல் ஆதித்ய குமார், கேணல் ராஜ் அபினவ் மற்றும் லெப்டினன் கேணல் மந்தீப் சிங் நான்கு ஆகிய சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட இந்தியாவின் உயர் பாதுகாப்பு முகாமைத்துவ பாடநெறியின் பிரதிநிதிகளின் குழு, அவர்களது மூலோபாய ஆய்வு முகாமைத்துவ பயணத்தின் ஒரு பகுதியாக 17 ஒக்டோபர் 2024 அன்று இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதியியை சந்தித்தனர்.
இந்த விஜயத்தின் போது, தூதுக்குழுவினர் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகள் மற்றும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி நூலகத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான திட்டங்களை மதிப்பாய்வு செய்தனர். நினைவுச் சின்னங்களின் பரிமாற்றத்தின் பின்னர், தூதுக்குழுவினர் இலங்கை முழுவதிலும் உள்ள முக்கிய இராணுவத் தளங்களைப் பார்வையிடும் தமது சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்தனர்.