21st October 2024 19:06:52 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னதாக 2024 ஒக்டோபர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் 7 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி, 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி மற்றும் 3 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணிகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
வருகை தந்த படைத்தளபதியை ஒவ்வொரு படையணிகளின் கட்டளை அதிகாரிகளால் வரவேற்கப்பட்டதுடன் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டார். பின்னர், முகாம் வளாகத்தில் குழு படம் எடுத்துகொண்ட அவர் மரக்கன்றும் நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, படையலகுகளின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் நிர்வாகக் கடமைகள் குறித்த விரிவான விளக்கத்தை கட்டளை அதிகாரிகள் வழங்கினர். பின்னர், படைத்தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன், வருகையை நினைவுகூரும் வகையில் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புகளை எழுதினார்.
இந் நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.