18th October 2024 18:24:58 Hours
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தில் 35 வருட கால சிறப்புமிக்க பணியின் பின்னர் ஓய்வு பெறுவதற்கு முன்னர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை 18 ஒக்டோபர் 2024 அன்று தனது குடும்பத்தாருடன் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும், தனது பதவிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பாத்திரங்களில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்திறனுக்காக இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
தனது குடும்பத்தினர் அவருக்கு அவரது பணிகாலம் முழுவதும் ஆற்றிய முக்கிய பங்கையும் இராணுவத் தளபதி பாராட்டினார்.
பதிலுக்கு, மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதி வழங்கிய உறுதியான வழிகாட்டலுக்கு நன்றியைத் தெரிவித்தார். கலந்துரையாடலின் முடிவில், இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு விசேட பாராட்டுச் சின்னமும் அவரது குடும்பத்தினருக்குப் பரிசுகளும் வழங்கினார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் இங்கே:
மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 1989 ஜூலை 14 ஆம் பாடநெறி இல 32 இன் ஊடாக பயிலிளவல் அதிகாரியாக இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இணைந்துக்கொண்டார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் இரண்டாம் லெப்டினன் நிலையில் 19 ஜனவரி 1991 கெமுனு ஹேவா படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் பணிபுரிந்த காலப்பகுதியில் தொடர்ந்து நிலை உயர்த்தப்பட்ட அவர் 10 ஒக்டோபர் 2022 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். 23 ஒக்டோபர் 2024 இல் தனது 55 வது வயதில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் அவர் 56 வது காலாட் படைப் பிரிவின் தளபதி மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதி ஆகிய பதவிகளை வகிக்கின்றார்..
தனது பணிக்காலம் முழுவதும், 6 வது கெமுனு ஹேவா படையணியின் குழு கட்டளையாளர் மற்றும் அதிகாரி கட்டளை, இராணுவக் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பொதுப் பணி நிலை அதிகாரி 3, 553 காலாட் பிரிகேட்டின் பிரிகேட் மேஜர், காலி தலைமையகத்தின் (நிர்வாகம் மற்றும் வழங்கல்) மேஜர், 214 வது காலாட் பிரிகேட்டின் பிரிகேட் மேஜர், ஹைட்டி ஐக்கிய நாட்டு அமைதி காக்கும் பணி குழுவின் பணி நிலை அதிகாரி, 52 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் பொதுப்பணிநிலை அதிகாரி 1 (செயற்பாடு), 3 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி, 27 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி, 12 வது காலாட் படைப்பிரிவின் பொதுப்பணிநிலை அதிகாரி 1 (செயற்பாடு), காலாட் பயிற்சி பாடசாலை பயிற்சி பிரிவின் கட்டளை அதிகாரி, 24 வது காலாட் படைப்பிரிவின் கேணல் பொதுப்பணி, முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் பொதுப்பணிநிலை அதிகாரி 1 (செயற்பாடு), இராணுவ பயிற்சி கட்டளைப்பிரிவின் கேணல் மூலோபாய மற்றும் கோட்பாடு, இராணுவ தலைமையப இராணுவ பயிற்சி பணிப்பகத்தின் கேணல் பயிற்சி, 515 வது காலாட் பிரிகேடின் பதில் பிரிகேட் தளபதி , 682 வது காலாட் பிரிகேட் தளபதி, 143 வது காலாட் பிரிகேடின் பிரிகேட் தளபதி, இராணுவ தலைமையகத்தின் நிர்வாக பணிப்பகத்தின் பணிப்பாளர், இராணுவ பயிற்சி பாடசாலையின் கட்டளை தளபதி, 68 வது காலாட் படைப்பிரிவின் கட்டளை தளபதி, 56 வது காலாட் படைப்பிரிவின் கட்டளை தளபதி மற்றும் இராணுவ மகளிர் படையணி படைத்தளபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
இராணுவத்திற்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு சேவையை கௌரவிக்கும் வகையில் சிரேஷ்ட அதிகாரிக்கு ரண சூர பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. "சிரேஷ்ட அதிகாரி தனது பதவிக் காலத்தில், வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்தில் பார்வைக் குறைபாடுள்ள நபர்களுக்கான கண் சிகிச்சை, கண் பரிசோதனைகளை மற்றும் தேவைப்படும் குடியிருப்பாளர்களுக்கு கண்ணாடிகள் வழங்குதல்" திட்டத்தை ஆரம்பித்தார்.
படையலகு கட்டளை அதிகாரி தந்திரோபாய பாடநெறி, மோட்டார் வாகன போக்குவரத்து அதிகாரி பாடநெறி, படையலகு ஆதரவு ஆயுத அதிகாரிகள் பாடநெறி, படையணி தலைமையக சமிக்ஞை அதிகாரி பாடநெறி, இளம் அதிகாரிகள் பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி, தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வு பாடநெறி, இளம் அதிகாரிகளின் காலாட் பாடநெறி – பாகிஸ்தான், கனிஷ்ட கட்டளை பாடநெறி இந்தியா, சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகளின் இராணுவ கண்காணிப்பாளர் பாடநெறி மற்றும் சீனாவில் இடைநிலைக் கட்டளை நிகழ்ச்சி போன்ற பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளை அவர் தனது இராணுவ வாழ்க்கையில் கற்றுள்ளார்.
அத்துடன் சிரேஷ்ட அதிகாரி, உயர் கல்வியை தொடர்ந்து, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் முதுகலைப் அறிவியல் பட்டத்தையும், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் முதுகலைப் அறிவியல் பட்டத்தையும் பெற்றுள்ளார்.