Header

Sri Lanka Army

Defender of the Nation

19th October 2024 09:00:00 Hours

யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தினால் இளவாலையில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணம் இளவாலையில் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு 2024 ஒக்டோபர் 18 ஆம் திகதி புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடொன்று கையளிக்கப்பட்டது. யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில், பயனாளிக்கு உத்தியோகபூர்வமாக வீட்டின் சாவியை கையளித்தார்.

10 வது இலங்கை பீரங்கி படையணி படையினரால் திரு.லயன் பீ. சிவக்குமார், திரு.காமினி ரத்நாயக்க, திரு.ஜெயராஜ், திரு.வஜிந்திர கன்னங்கரா, திருமதி ரிதுபன், திரு.அமரசிங்கம் துஷ்யந்தம், பொம்பார்டியர் வை.எம் ஜயதிஸ்ஸ மற்றும் 10 வது இலங்கை பீரங்கி படையணி படையினரின் உதவியுடன் இத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இத் திட்டம் 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஜே.கே விமலரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ மற்றும் வழிகாட்டலின் கீழ் 513 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டலின் கீழ் 10 வது இலங்கை பீரங்கி படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

இவ் விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், குடும்பத்தினர், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.