Header

Sri Lanka Army

Defender of the Nation

19th October 2024 14:35:21 Hours

சிவில் ஊழியர்கள் மற்றும் போர் வீரர்களை ஆதரித்து இராணுவ தலைமையகத்தில் நன்கொடை நிகழ்ச்சி

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவத் தலைமையகத்தில் 16 ஒக்டோபர் 2024 அன்று நன்கொடை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின் போது இராணுவத்தில் பணியாற்றும் சிவில் 100 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், கம்புருபிட்டிய, அபிமன்சல II இல் உள்ள நீச்சல் தடாகத்தின் பராமரிப்பிற்காக அத்தியாவசிய துப்புரவு பொருட்கள் வழங்கப்பட்டதுடன் இது சிகிச்சை பெற்று வரும் போர் வீரர்களுக்கு பயனளிப்பதாக அமைந்துள்ளது.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.