18th October 2024 21:50:52 Hours
2024 ஒக்டோபர் 12 முதல் 14 ம் திகதி வரை ஹொரணை தொம்பகொட படையணி தலைமையகத்தில் இலங்கை இராணுவ போர்கருவி படையணி தனது 75 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.
இந்த கொண்டாட்டத்தில் படையணியில் உயிர்நீத்த போர்வீரர்களை கௌரவிக்கும் வகையில் ஆசீர்வாதங்கள் வேண்டி இரவு முழுதும் பிரித் பாராயண நிகழ்வுடன் ஆரம்பமானது.
2024 ஒக்டோபர் 13 ம் திகதி காலை, இந்த நிகழ்ச்சியின் ஆன்மீக பூஜையை தொடர்ந்து, பிரசங்கத்தில் பங்கேற்ற வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினருக்கு தானம் வழங்கப்பட்டது.
போர் நினைவுச் தூபியில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வை தொடர்ந்து, உயிரிநீத்த போர்வீரர்களின் குடும்பங்களுக்கு படையணி தலைமையகத்தில் தேநீர் விருந்துபசாரம் வழங்கப்பட்டது.
அதேசமயம், படை வீரர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கி, உயிர்நீத்த போர் வீரர்களை நினைவுகூரும் தான நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இலங்கை இராணுவ போர்கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. இரேஷா பெர்னாண்டோ தலைமையில் போர்கருவி படையணி பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில், உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதிப் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன்,கோப்ரல் உணவகத்தில் மதிய உணவுடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவடைந்தன.
14 ஒக்டோபர் 2024 அன்று, போர்கருவி படையணி தலைமையகத்தில் ஒழுக்கம் மற்றும் பெருமையைப் பிரதிபலிக்கும் வகையில், படைத்தளபதிக்கு பாரம்பரிய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒரு நினைவு முத்திரை வெளியிடப்பட்டது, இது படையணியின் வளமான வரலாறு மற்றும் சாதனைகளை குறிக்கிறது.
அணிவகுப்புக்குப் பின்னர் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் சிப்பாய்கள் பங்கேற்பாளர்கள் இந்த நிகழ்வை அழியாத வகையில் குழு படம் எடுத்துக்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்து, பங்கேற்பாளர்களிடையே நட்புறவை வளர்க்கும் வகையில், இலங்கை போர்கருவி படையணி பாடசாலை கேட்போர் கூடத்தில் சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது.
மதிய உணவின் போது, படைத் தளபதி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் படையணிக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பையும் அவர்களின் பங்கேற்பையும் அங்கீகரித்து, நினைவு நாணயங்களுடனான நினைவு சின்னங்கள் வழங்கினார்.
இலங்கை போர்கருவி படையணியின் படைத் தளபதியும் வழங்கல் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஈஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சீ எல்எஸ்சீ எஎடிஒ, இலங்கை போர்கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரேஷா பெர்னாண்டோ இணைந்து கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், போர்கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிப்பாய்கள் மற்றும் உயிரிழந்த போர்வீரர்களின் குடும்பங்கள் கலந்துகொண்டனர்.