18th October 2024 18:32:42 Hours
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 7 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் 2024 ம் ஒக்டோபர் 10 ம் திகதி ஜே/ 328 கொடிகாமம் தெற்கு கிராம அதிகாரி பிரிவில் வசிக்கும் ஆதரவற்ற குடும்பம் ஒன்றின் புதிய வீடிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இம் முயற்சியானது 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்எடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 523 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எஸ்எம்சீஎஎஸ் சமரதுங்க ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
இராணுவப் படையினரால் மேற்கொள்ளப்படும் இந்த நிர்மாணத்திற்கான நிதி அனுசரணையை வழங்குவதற்கு அறக்கட்டளை அமைப்பின் நன்கொடையாளர்களான ஆயர் ஏ.அருள் மற்றும் உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி கலந்து கொண்டார்.
இந் நிகழ்ச்சியில் அறக்கட்டளை அமைப்பின் உறுப்பினர்கள் ஆயர், ஏ அருள் மற்றும் கிறிஸ்தவ மத தலைவர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.