16th October 2024 19:17:42 Hours
இலங்கை கவச வாகன படையணி பயிற்சி நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘மேஜர் ஜெனரல் வை பாலரத்னராஜா வீஎஸ்வீ யுஎஸ்பீ போர் சகிப்புத்தன்மை பயிற்சி போட்டி-2024’ கலத்தேவ கவச வாகன படையணி பயிற்சி நிலையத்தில் 2024 செப்டெம்பர் 01 முதல் 29 வரை நடைபெற்றது. இந்தப் போட்டியின் நோக்கம் கவச வாகன படையணியில் உள்ள 6 படையலகுகளுக்கு உடற்தகுதி, சகிப்புத்தன்மை, தன்னம்பிக்கை மற்றும் குழு உணர்வை மேம்படுத்துவதாகும்.
மறைந்த மேஜர் ஜெனரல் வை பாலரத்னராஜா அவர்களை கௌரவிக்கும் இந் நிகழ்வு அவரது குடும்பத்தினரின் அனுசரணையுடன் இடம்பெற்றது.
3 வது இலங்கை கவச வாகன படையணி இப் போட்டியில் மேஜர் ஜெனரல் வை பாலரத்னராஜா சாவல் கிண்ணத்தையும் ரூபா 100000 பரிசுத்தொகையும் பெற்று முதலிடத்தை தட்டிச்சென்றது. 4 வது இலங்கை கவச வாகன படையணி (ஆர்எப்டி) ,6 வது இலங்கை கவச வாகன படையணி என்பன இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்று முறையே ரூபா 60000 ,ரூபா 40000 ஆகிய பரிசில் தொகையினை வென்றன. இப் போட்டியில் 6 வது இலங்கை கவச வாகன படையணியின் லான்ஸ் கோப்ரல் வீபீஆர்டி தனஞ்ய சிறந்த போர் சகிப்புத்தன்மை சிப்பாயாக அங்கீகரிக்கப்பட்டார்.
2024 ஒக்டோபர் 01 ஆம் திகதி இடம்பெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வில் இலங்கை கவச வாகன படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் எம்எஸ் தேவப்பிரிய யூஎஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.