Header

Sri Lanka Army

Defender of the Nation

17th October 2024 17:01:10 Hours

புதிய இராணுவ உபகரண பணிப்பாளர் நாயகம் கடமை பொறுப்பேற்பு

இலங்கை கவச வாகன படையணியின் பிரதி படைத்தளபதி மேஜர் ஜெனரல் எம்.எஸ். தேவப்பிரிய யூஎஸ்பீ என்டிசி அவர்கள் இலங்கை இராணுவத்தின் 33வது உபகரண பணிப்பாளர் நாயகமாக 7 ஒக்டோபர் 2024 அன்று இராணுவத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

அவர் இராணுவ மரபுகளுக்கு ஏற்ப கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் தனது கையொப்பத்தை வைத்தார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.