16th October 2024 19:16:59 Hours
ஊவா மாகாண பிரதி சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அலுவலகம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, கொமாண்டோ படையணி படையினர், சிறிய உலக முடிவு (புஞ்சி லோகந்த) பகுதியில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு வீசப்பட்ட இளைஞனின் சடலத்தை 16 ஒக்டோபர் 2024 அன்று மத்திய பாதுகாப்பு படைத்தலைமையக தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 112 வது பிரிகேட் தளபதி அவர்களின் மேற்பார்வையின் கீழ் மீட்டுள்ளனர்.
இக்கொலை 2024 ஒக்டோபர் 01 ஆம் திகதி இடம்பெற்றதாக மாடோல்சீமை பொலிஸாரினால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரின் விசாரணைகளின் போது, 22 வயதுடைய இளைஞன், கைது செய்யப்பட்ட இருவரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும், பின்னர் அவரது சடலத்தை சிறிய உலக முடிவிலிருந்து வீசப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இறந்த இளைஞனைக் கண்டுபிடிக்க கொமாண்டோ படையணி படையினர் பள்ளத்தாக்கில் இறங்கினர். இளைஞனின் சடலத்தைக் கண்டுபிடித்து, சவால்களுக்கு மத்தியில் சிறிய உலக முடிவின் மேற் பகுதிக்கு கொண்டு வந்தனர்.
மேலதிக பரிசோதனை மற்றும் விசாரணைகளுக்காக கொமாண்டோ படையணி படையினர் சடலத்தை மாடோல்சீமை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.