Header

Sri Lanka Army

Defender of the Nation

16th October 2024 19:19:59 Hours

கஜபா படையணியின் 41வது ஆண்டு நிறைவு விழா மற்றும் வீரர்களுக்கு நினைவஞ்சலி

கஜபா படையணி தனது 41 வது ஆண்டு நிறைவு விழாவை 14 ஒக்டோபர் 2024 அன்று கஜபா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டாடியது.

முதலில் கஜபா படையணியின் படைத் தளபதி, நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, படையணியின் ஸ்தாபகத் தந்தை மறைந்த மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஐ.வி.கே.எம். விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களது சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அணிவகுப்பு மரியாதையைத் தொடர்ந்து நடைபெற்ற அனைத்து நிலையினருக்குமான மதிய உணவுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.

2024 ஒக்டோபர் 13ம் திகதி கஜபா போர் வீரர்களின் நினைவு தூபியில் கஜபா படையணியின் உயிர்நீத்த போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. போரின் போது தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த 171 அதிகாரிகள் மற்றும் 4,068 சிப்பாய்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். 176 அதிகாரிகள் மற்றும் 4,463 ஆண்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர், பலர் நிரந்தரமாக ஊனமடைந்தனர்.

நடைபெற்ற நினைவேந்தல், பிரித் பாராயணம் மற்றும் தானம் வழங்கும் நிகழ்வுகளில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் உயிரிழந்த போர்வீரர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.