Header

Sri Lanka Army

Defender of the Nation

15th October 2024 20:46:38 Hours

56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி 561 வது காலாட் பிரிகேட் மற்றும் கட்டளை அலகுகளுக்கு விஜயம்

56 வது காலாட்படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள், 561 காலாட் பிரிகேட், 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 16 வது இலங்கை சிங்க படையணி என்பவற்றிக்கு 4 ஒக்டோபர் 2024 அன்று விஜயம் மேற்கொண்டார். வருகை தந்த தளபதியை 561 வது காலாட் பிரிகேட் தளபதி, கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் வரவேற்றனர்.

படைப்பிரிவு தளபதி படையினர்களுடன் நேரடியாக உரையாடலை மேற்கொண்டதுடன், அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களின் கடமைகளுக்காக அவர்களுக்கு ஊக்குவிப்புகளை வழங்கினார். வருகையின் நிறைவாக படைப்பிரிவின் தளபதி அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை பதிவிட்டார். இந்த விஜயத்தின் போது சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.