Header

Sri Lanka Army

Defender of the Nation

14th October 2024 18:05:38 Hours

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி அதிகாரிகளுக்கு ஈய அமில மின்கல பராமரிப்பு பட்டறை

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் 25 அதிகாரிகளுக்கான ஈய அமில மின்கலகளின் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பராமரிப்பு தொடர்பான ஒரு நாள் செயலமர்வு 11 ஒக்டோபர் 2024 அன்று இரத்மலானையில் உள்ள எல்கார்டோ தொழிற்சாலையில் நடைபெற்றது.

இச் செயலமர்வில் தொழிற்சாலை விஜயம் மற்றும் ஈய அமில மின்கலகளின் உற்பத்தி மற்றும் பராமரிப்பு செயற்பாடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும் இப்பயிற்சி மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணியாளரின் திறன்களை மேம்படுத்துவதை மையமாக கொண்டதாகும். பங்கேற்பாளர்களுக்கு மதிப்புமிக்க அனுபவத்தை வழங்குவதற்காக மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பாளரினால் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.