Header

Sri Lanka Army

Defender of the Nation

14th October 2024 18:04:13 Hours

1 வது இலங்கை இராணுவ மகளீர் படையணியின் 45 வது ஆண்டு நிறைவு

1 வது இலங்கை இராணுவ மகளீர் படையணி கட்டளை அதிகாரி மேஜர் ஈஎம்எச்சி டி சேரம் பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 1 வது இலங்கை இராணுவ மகளீர் படையணி தனது 45 வது ஆண்டு நிறைவை 2024 செப்டம்பர் 1 அன்று இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கொண்டாடியது.

வருகை தந்த கட்டளை அதிகாரியை நுழைவாயிலில் மகளீர் படையணி படையினர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி வரவேற்றனர். பின்னர் அவர் 1 வது இலங்கை இராணுவ மகளீர் படையணி போர் வீரர் நினைவுத்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தியதுடன் படையலகு அணிவகுப்பு மரியாதையினை அடுத்து அனைத்து நிலையினருடன் குழு படம் எடுத்துக்கொண்டார்.

பின்னர் 1 வது இலங்கை இராணுவ மகளீர் படையணியின் 14 சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவுப்பொதிகள் நன்கொடையும் மறைந்த இரண்டு துணிச்சலான போர் வீராங்கனைகளின் குடும்பத்தினருக்கு நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் பயிற்சிகளில் சிறந்து விளங்கிய வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் அனைத்து நிலையினருடனான மதிய உணவுடன் அன்றைய நிகழ்வு நிறைவு பெற்றது.

மேலும், 29 ஆகஸ்ட் 2024 அன்று, படையினருக்கு ஆசீர்வாதம் மற்றும் 1 வது இலங்கை இராணுவ மகளீர் படையணியின் வீரமரணம் அடைந்த போர்வீராங்கனைகள் மற்றும் அனைத்து படையினரின் நலனுக்காக போதி பூஜை மற்றும் தர்ம பிரசங்கம் என்பனவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.