Header

Sri Lanka Army

Defender of the Nation

14th October 2024 17:59:48 Hours

கஜபா படையணியின் 41வது ஆண்டு நிறைவு விழாவில் இராணுவத் தளபதி

கஜபா படையணி தனது 41 வது ஆண்டு நிறைவு விழாவை அனுராதபுரம் சாலியபுர படையணி தலைமையகத்தில் 2024 ஒக்டோபர் 13-14 ஆம் திகதிகளில் தொடர்ச்சியான நிகழ்வுகளுடன் கொண்டாடியது.

இரவு முழுவதும் பிரித் பாராணயங்கள், படையணிக்கு ஆசீர்வாதம் மற்றும் வீரமரணமடைந்த போர் வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியு மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் பாரம்பரிய நடனக் கலைஞர்களின் பங்குபற்றலுடன் புனித நினைவுச்சின்னம் மற்றும் புனிதமான புனித நூல்களின் (பிரிவாண போத) ஊர்வலம் மகா சங்கத்தினர் சகிதம் எண்கோண 'பிரித் மண்டபத்திற்கு' எடுத்துச் செல்லப்பட்டதுடன் பிரித் பாராயணம் ஆரம்பமானது. பின்னர் நாட்டின் வரலாற்றின் முக்கியமான காலகட்டங்களில் இராணுவத்தின் விலைமதிப்பற்ற பங்கை எடுத்துரைத்து பிரதம தேரர் சொற்பொழிவை நிகழ்த்தினார்.

14 ஒக்டோபர் 2024 அன்று, பௌத்த பிக்குகளின் பங்கேற்புடன் தானம் வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டது. யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் கஜபா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பாரம்பரிய நிகழ்வினைத் தொடர்ந்து மகா சங்கத்தினருக்கு 'புத்த பூஜை' மற்றும் அன்னதானம் வழங்கினார்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் படைப்பிரிவின் தளபதிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.