14th October 2024 09:51:53 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபி ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் 13 ஒக்டோபர் 2024 அன்று ஜயதிலகராம புராண விஹாரை லானில் கலபொட ஞாபகார்த்த சங்கவாசய திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
வண. கட்டபேரிகந்தே ரத்தனசிறி நாயக்க தேரரின் அழைப்பின் பேரில் இந்த சுப நிகழ்வு இடம்பெற்றது.
இந்த குடியிருப்பு நிதி நன்கொடையாளர்களான திரு. ஜி.கே. ஜினதாச மற்றும் திருமதி சந்திரா பியசீலி அமரசேன ஆகியோரின் நிதியுதவியில் இலங்கை இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களின் வருகையுடன் அன்றைய நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து இராணுவத் தளபதியினால் விகாரை வளாகத்தில் நினைவுச் சின்னம் வைக்கப்பட்டது. சம்பிரதாய நிகழ்வுகளை தொடர்ந்து, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குடியிருப்பை இராணுவத் தளபதி நன்கொடையாளர்களுடன் இணைந்து சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார். மகாசங்கத்தினரின் வழிகாட்டுதலின் கீழ் ஐந்து கட்டளைகளை (பஞ்சசீலயம்) கடைப்பிடிப்பவர்களுடன் சமய நிகழ்வுகள் ஆரம்பமாகின.
பின்னர், வண. ஓமல்பே தம்மாலோக தேரர் வரவேற்பு உரை நிகழ்த்தியதுடன், புதிதாக நிர்மாணித்து முடிக்கப்பட்ட குடியிருப்பை அமரபுர நிகாயாவின் பிரதம பீடாதிபதி வணக்கத்துக்குரிய கரகொட உயங்கொட மைத்திரி மூர்த்தி மகா நாயக்க தேரர் உத்தியோகபூர்வமாக மகா சங்கத்தினருக்கு வழங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, சியாம் மகா நிகாயாவின் கோட்டே ஸ்ரீ கலையாணி சாமக்ரி தர்ம மகா சங்க சபையின் பிரதம பீடாதிபதி கலாநிதி இட்டப்பன தம்மாலங்கார மகா நாயக்க தேரர், வணக்கத்துக்குரிய கரகொட உயங்கொட மைத்திரி மூர்த்தி, அமரபுர நிகாய மகாநாயக்க தேரர், மகா வண. மக்குலாவே விமலா. புத்தசாசனத்தைப் பாதுகாப்பதற்கும், இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்பையும் பாராட்டி, இராணுவத் தளபதிக்கு மூன்று அத்தியாயங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராமண்ண மகா நிகாயாவின் நாயக்க தேரர் “கௌரவப் பட்டத்தை” வழங்கினார்.
பேலியகொட நகர சபையின் செயலாளர் திருமதி குஸ்லானி தரங்க மற்றும் நன்கொடையாளர் ஜினதாச ஆகியோருக்கும் இந்நிகழ்வின் கௌரவப் பட்டம் வழங்கப்பட்டது. மகா சங்கத்தினரின் செத்பிரித் பாராயணம் மற்றும் சிறப்பு சொற்பொழிவுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன.
இந்நிகழ்வில் கங்காராம விகாரையின் பிரதமகுருவான கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரர், மதகுருமார்கள், பதவி நிலை பிரதானி, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பெருமளவிலான பக்தர்கள் கலந்து கலந்துகொண்டு மறக்கமுடியாத நாளாகக் கொண்டாடினர்.