14th October 2024 10:00:05 Hours
இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவின் ஒரு பகுதியாக 8 வது விஜயபாகு காலாட் படையணி, 4 வது விஜயபாகு காலாட் படையணி, 10 (தொ) கெமுனு ஹேவா படையணி மற்றும் 11 வது இலங்கை பீரங்கி படையணி படையினரால் நான்கு புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக கடந்த 2024 ஒக்டோபர் 12ம் திகதி பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
8 வது விஜயபாகு காலாட் படையணியினரால் முருங்கன் ஜீவநகரில் வசிக்கும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் (சி/100613) லான்ஸ் கோப்ரல் எ ஜேரம் எனும் சிப்பாக்கு ஒரு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.
அதேவேளை, மன்னார் மேற்கு பன்னங்கட்டுக்கொடுவயில் வசிக்கும் ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்கு 4 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் புதிய வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டது.
10 (தொ) கொமுனு ஹேவா படையணி படையினரால் மன்னார் வட்டக்கண்டல் குருவில் தகுதியான குடும்பம் ஒன்றிற்கு புதிய வீடொன்றை நிர்மாணித்தனர்.
மேலும், 11வது இலங்கை பீரங்கி படையணி படையினரின் முயற்சியில் கட்டுக்காரன்குடியிருப்பு செல்வரியில் ஆதரவற்ற குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.
இந்த வீட்டுத் திட்டங்கள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ, 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்பீஎஆர்பீ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன. 542 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டிஇஎம் சந்திரசாகர ஆர்டபிள்யூபீ பீஎஸ்சீ மற்றும் 8வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்எச்ஆர்ஜீ டி சில்வா ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், 8 வது விஜயபாகு காலாட் படையணி, படையினர் நிறைவு செய்தனர்.
541 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிவைசி பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் 10 (தொ) கொமுனு ஹேவா படையணியின் லெப்டினன் கேணல் டபிள்யூஜீஜீஎஸ் பண்டார தலைமையில் அனைத்து நிலையினரின் ஆதரவுடன் அவர்களின் திட்டம் நிறைவு செய்யப்பட்டது.
543 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிவை நாணயக்கார ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், 4 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் சீஎஸ்கே லியனகே பீஎஸ்சீ, 11வது இலங்கை பீரங்கிப் படையணியின் கட்டளை அதிகாரி பிஎம்ஆர் பெர்டினாண்டர்சன் பீஎஸ்சீ ஐஜீ ஆகியோரின் மேற்பார்வையில் படையினரால் குறித்த திட்டங்கள் நிறைவுசெய்யப்பட்டன.