14th October 2024 09:17:22 Hours
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூஎம்எஸ்சீகே வனசிங்ஹ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 17 வது இயந்திரவியல் காலாட் படையணி படைத்தளபதியாக பதவியேற்றதன் பின்னர் இயந்திரவியல் காலாட் பயிற்சி மையம் மற்றும் 2 வது இயந்திரவியல் காலாட் படையணிக்கு தனது முதல் விஜயத்தினை மேற்கொண்டார்.
வருகை தந்த தளபதியை, இயந்திரவியல் காலாட் பயிற்சி மைய பதில் தளபதி லெப்டினன் கேணல் டிஎஸ்எஸ் பெரேரா பீஎஸ்சி மற்றும் 2 வது இயந்திரவியல் காலாட் படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பீவீஆர்பீ குமார ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களுடன் பாராம்பரிய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை தொடரந்து வரவேற்றனர்.
மேஜர் ஜெனரல் வனசிங்க தனது விஜயத்தின் போது, இயந்திரவியல் காலாட் பயிற்சி மையம் மற்றும் 2 வது இயந்திரவியல் காலாட் படையணி சிப்பாய்களுக்கு இயந்திரிவியற் சிப்பாயின் பங்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
பின்னர் அவர் முகாம் வளாகத்தை விஜயம் செய்து இரு தலைமையகங்களிலும் செயல்பாட்டு மற்றும் நிர்வாக செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், இரு தலைமையகங்களிலும் படைத்தளபதி மரக்கன்றினை நடுவதற்கு அழைக்கபட்டார்.
இவ் விஜயத்தின் போது, இயந்திரவியல் காலாட் படையணி படைத்தளபதியுடன், இயந்திரவியல் காலாட் படையணி நிலைய தளபதி பிரிகேடியர் ஏகே பீரிஸ் ஆர்எஸ்பீ மற்றும் இயந்திரவியல் காலாட் பிரிகேட் தளபதி எச்ஏஏஎன்சீ பிரபாத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இணைந்திருந்தனர்.