Header

Sri Lanka Army

Defender of the Nation

13th October 2024 18:55:50 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணி பிரதி தளபதி இலங்கை இராணுவ தொண்டர் படையணி பயிற்சி பாடசாலைக்கு விஜயம்

இலங்கை இராணுவ தொண்டர் படையணி பிரதி தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூஜீபீ சிசிர குமார ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவ தொண்டர் படையணி பயிற்சி பாடசாலைக்கு 2024 ஒக்டோபர் 5 அன்று விஜயம் மேற்கொண்டார். இலங்கை இராணுவ தொண்டர் படையணி பயிற்சி பாடசாலை என்பது தொண்டர் படைக்கான முதன்மையான பயிற்சி நிறுவனமாகும்.

வருகை தந்த, மேஜர் ஜெனரல் டப்ளியூஜீபீ சிசிர குமார அவர்களை இலங்கை இராணுவ தொண்டர் படையணி பயிற்சி பாடசாலை தளபதி கேணல் ஜேஏஜே ஜயரத்ன கேஎஸ்பீ அவர்கள் வரவேற்றதுடன் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில், சிரேஷ்ட அதிகாரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, படையினருடன் குழு படம் எடுத்துக் கொண்டார்.

இந்த விஜயத்தின் போது கேணல் கேணல் ஜேஏஜே ஜயரத்ன கேஎஸ்பீ அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணி பயிற்சி பாடசாலையின் சாதனைகள் மற்றும் எதிர்கால தேவைகள் பற்றிய விரிவான விளக்கத்தை வழங்கினார். படையினருக்கு ஆற்றிய உரையில், மேஜர் ஜெனரல் சிசிர குமார ஆர்எஸ்பீ சமீபத்திய பயிற்சி தணிக்கையில் "சிறந்த" விகிதத்திற்கு பாடசாலையின் நிலையான முன்னேற்றம் குறித்து தனது திருப்தியை வெளிப்படுத்தினார்.

தொண்டர் உறுப்பினர்களுக்கான பயிற்சிகளின் தரத்தை உயர்த்துவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஊழியர்களுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

உரையாற்றியதைத் தொடர்ந்து, மேஜர் ஜெனரல் சிசிர குமார ஆர்எஸ்பீ அவர்கள் பயிற்சிப் பாடசாலைக்கு சென்று, பின்னர் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துசாரத்தில் பங்குபற்றியதுடன் அங்கு அவர் படையினருடன் கலந்துரையாடி தோழமை மற்றும் ஊக்கத்தை விருத்தி செய்தார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இவ்விஜயத்தில் பங்குபற்றினர்.