14th October 2024 08:15:26 Hours
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் பொறியியல் படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் 11 அக்டோபர் 2024 இல் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
தியகம மொரட்டுவ பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்ப பீடத்தின் பல்லூடக கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வுக்கு வருகை தந்த பிரதம அதிதியான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களை அதிபர், பிரிதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் சிரேஸ்ட மாணவத் தலைவர்கள் பாராம்பரிய முறைப்படி வரவேற்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சியில் பாரம்பரிய தாம்பூலம் வழங்கி வரவேற்கப்பட்டத்துடன், மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. அதிபர் திருமதி மஹேஷிகா ரூபசிங்க தனது வரவேற்பு உரையில், மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் சிறப்பு விருந்தினர்களை வாழ்த்தி, அன்றைய நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வின் போது, மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் சிறப்பான கல்வி சாதனைகளுக்காக 390 மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார். இந்த மாணவர்கள் க.பொ.த உயர்தர சித்தி, பல்கலைக்கழக நுழைவு, க.பொ.த சா/த மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை சிறந்து விளங்கியவர்கள்.
கலைத்துறையில் சிறந்து விளங்கி சிறந்த மாணவிக்கான விருதைப் பெற்ற நிஷாந்த நதிரங்க மற்றும் 2023 ஆம் ஆண்டின் சிறந்த மாணவியாக தெரிவு செய்யப்பட்ட அஞ்சலி ஹிமாஷா உட்பட சிறந்த கலைஞர்களுக்கு விசேட அங்கீகாரம் வழங்கப்பட்டது.