12th October 2024 15:07:01 Hours
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டலின் கீழ் நாடளாவிய ரீதியில் மர நடுகைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ், இந்த முயற்சி 10 ஒக்டோபர் 2024 அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி அவர்களினால் "சிவப்பு சந்தன" மரக்கன்று நாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்டது.
சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் ஸ்ரீ ஜயவர்தனபுர விவசாயத் திட்டத்தில் சமாந்தர நிகழ்வுகள் இடம்பெற்றன. நாடு முழுவதும், அனைத்து பாதுகாப்புப் படை தலைமையகங்கள், படைப்பிரிவுகள், படையலகுகள் மற்றும் படையணிகளில் 37,635 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், பணிப்பகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பாடசாலைகளில் 2,500 மரக்கன்றுகளையும், பல்வேறு இடங்களில் 15,000 கருவா மற்றும் 1,500 டீஈஜேசி மாங்கன்றுகள் இராணுவப் பண்ணைகள் உட்பட பல்வேறு பிரதேசங்களில் நடப்பட்டன.