Header

Sri Lanka Army

Defender of the Nation

12th October 2024 15:02:50 Hours

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு புதிய வசதி

இராணுவத் தளபதியும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர், குருநாகல், ஹெரலியவல இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையக படையலகில் இரண்டு புதிய தங்குமிட வசதி கொண்ட கட்டிடத்தை இன்று மாலை (ஒக்டோபர் 11) திறந்து வைத்தனர்.

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் எச்.ஏ. கீர்த்திநாத ஆர்எஸ்பீ கேஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள், முகாம் வளாகத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதியை இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய மரியாதையுடன் வரவேற்றார்.

முதலாவதாக, 350 சிப்பாய்கள் தங்கக்கூடிய மூன்று மாடிக் கட்டிடத்தைக் கொண்ட, இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சிப்பாய்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட தங்கும் வசதியை (கனவு இல்லம்) அன்றைய பிரதம விருந்தினர் பார்வையிட்டார். அனைத்து பிரிவுகளையும் பார்வையிட்டதுடன், நவீன வசதியுடைய கட்டிடத்தை நிர்மாணித்து முடித்த இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் படையினருடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அதன் பின்னர், பிரதம அதிதி இலங்கை சக்கர நாற்காலி கிரிக்கெட் சங்கத்தை பிரதிநிதித்துவபடுத்தும் மாற்றுத்திறனாளியான சிப்பாய் பி.எச்.எஸ். குமாரவங்ச அவர்களுக்கு சக்கர நாற்காலியை அன்பளிப்புச் செய்த்தார்.

சம்பிரதாயமான தேநீர் விருந்துபசாரத்தை தொடர்ந்து, இராணுவத் தளபதி சிறப்புப் பதாகையை திரைநீக்கம் செய்துவிட்டு, பிரிகேடியர்களுக்காகவும் அதற்கு மேற்பட்டவர்களுக்காகவும் நிர்மாணிக்கப்பட்ட சிரேஷ்ட அதிகாரிகள் தங்குமிட (மவுண்டன் வியூ) கட்டிடத்திற்குச் சென்றார். இராணுவத் தளபதி புதிய வசதியுடைய கட்டிடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்ததுடன், பல சிரேஷ்ட அதிகாரிகளுடன் அதனை பார்வையிட்டார். இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரின் முயற்சிகளுக்காகவும், இத்திட்டத்தை குறைந்த செலவில் வெற்றிகரமாக முடித்தமைக்காகவும் அவர் பாராட்டினார்.

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.